×

நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா

ஈரோடு, ஜூன் 6: ஈரோடு தொட்டிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த வாலிபர் தருமபுரி மாவட்டம் கொங்கரம்பட்டி கீழ் ஊரை சேர்ந்த பழனி மகன் மோகனா வினு (19), பிஎஸ்சி கணித பட்டதாரி.

தற்போது ஈரோடு கவுண்டச்சிபாளையத்தில் தங்கி வேலை தேடி வந்ததும், சம்பவ இடத்தில் ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மோகனா வினுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Nagadevampalayam Panchayat ,Erode ,Erode Thanipalayam ,Erode Railway Police ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா