×

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை: கண்ணீர் விட்ட வேட்பாளர்

சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முகாமிட்டுள்ளார். கட்சி தோல்வியடைந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த மாஜி அமைச்சர் கருப்பண்ணன் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார். அதன்பிறகு தோல்வியடைந்த சேலம் தொகுதி வேட்பாளர் விக்னேஷ், ஓமலூர் எம்எல்ஏ மணி, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் ஆகியோர் எடப்பாடியை சந்தித்து பேசினர். அப்போது விக்னேஷ் கண் கலங்கினார். அவருக்கு எடப்பாடி ஆறுதல் கூறினார். அதேபோல் தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சேலம் வந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தோல்விக்கான காரணம் குறித்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, தங்கமணி, கே.பி.அன்பழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ்சத்யன் ஆகியோரும் நேற்று எடப்பாடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை: கண்ணீர் விட்ட வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Salem ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Salem Highway ,minister ,Karuppannan ,Erode ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...