×

‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே’ பாடலுடன் ‘‘விழுந்தால் விதையாய் எழுவோம்’’ செல்லூர் ராஜூ ‘எக்ஸ்’ தள பதிவு

மதுரை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியடைந்தன. இதன்காரணமாக அதிமுக தலைவர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்தநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ‘விழுந்தால் விதையாய் எழுவோம்’ என்ற தலைப்பில் தனது எக்ஸ் தளத்தில் அதிமுக கொடியுடன் பதிவிட்டுள்ளார். அதில் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற சினிமா பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி இருவரும் உருவாக்கி வளர்த்த இயக்கம். விழுந்தாலும் எழும் பீனிக்ஸ் பறவை போல்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

The post ‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே’ பாடலுடன் ‘‘விழுந்தால் விதையாய் எழுவோம்’’ செல்லூர் ராஜூ ‘எக்ஸ்’ தள பதிவு appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Madurai ,AIADMK ,Tamil Nadu ,minister ,
× RELATED மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்...