- திமுக
- பாராளுமன்ற
- கோயம்புத்தூர்
- அமைச்சர்
- தி.R.P.Raja
- பாராளுமன்ற
- டி.ஆர்.பி ராஜா
- கணபதி ராஜ்குமார்
- இந்தியா கூட்டணி
- பாராளுமன்ற உறுப்பினர்
- தின மலர்
கோவை: 28 ஆண்டுகளுக்கு பின்னர் திமுகவை சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளதால் கோவையில் சிறுகுறு தொழில்கள் மகத்தான வளர்ச்சியை காண போகின்றன என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இந்தியா கூட்டணி சார்பாக திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார் கோவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் கோவை ஜிசிடி வாக்கு எண்ணும் மையத்திற்கு அமைச்சர் டிஆர்பி ராஜா வருகை தந்து, கணபதி ராஜ்குமாரை சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கோவை மண்ணில் ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு திமுக உறுப்பினரை மக்கள் தந்திருப்பது பெருமையாக இருக்கிறது. காரணம் முதல்வர்தான். தமிழக மக்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கூட்டணி கட்சியினர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி. இந்த பெரியார் மண்ணில் கலைஞர் மண்ணில் பாசிசம், பிரிவினைவாதம், பொய் பித்தலாட்டத்திற்கு இடம் இல்லை என்று மக்கள் உரக்க சொல்லி இருக்கிறார்கள். அதை கையில் எடுத்துக்கொண்டு கோவை மண்ணிற்கு அற்புதமான வளர்ச்சியை கணபதி ராஜ்குமார், நிச்சயமாக கொண்டு வந்து தருவார்.
அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். முதல்வர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். கோவைக்கு புதிய விமான நிலைய விரிவாக்க பணிகள் நடக்கும். சிறுகுறு தொழில்கள் மகத்தான வளர்ச்சியை காண போகிறார்கள். வளர்ச்சிக்கான பயணங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகள்தான் இருக்க வேண்டும். திமுக எப்படி மக்களோடு மக்களாக பயணித்து புதிய திட்டங்கள் கொண்டு வந்து சேர்த்து ஒட்டுமொத்த தமிழகத்திற்காக உழைக்கிறதோ அப்படித்தான் அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் என்பது எங்களின் ஆசை. வெறுப்பு அரசியல் இருக்கக்கூடாது. உணர்ச்சிக்கான திட்டங்கள், வளர்ச்சிக்கான பயணங்கள், வளர்ச்சிக்கான முயற்சிகள்தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post 28 ஆண்டுக்கு பின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோவையில் சிறுகுறு தொழில்கள் மகத்தான வளர்ச்சியை காண போகிறது: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி appeared first on Dinakaran.