×

ஸ்மிருதி இரானி முதல் அஜய் மிஸ்ரா வரை .. மக்களவை தேர்தலில் மண்ணை கவ்விய 13 ஒன்றிய அமைச்சர்கள்!!

டெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர். ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட 13 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். ராஜீவ் சந்திரசேகர், அர்ஜூன் முண்டா, அஜய் மிஸ்ரா, கைலாஷ் சவுத்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.

*ஸ்மிருதி இரானி: 2019ல் ராகுல் காந்தியை தோற்கடித்து அமேதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற இரானி, காந்தி குடும்பத்தின் உதவியாளரான காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.

*ராஜீவ் சந்திரசேகர்: கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சசி தரூரிடம் தோல்வியடைந்தார்.

*அஜய் மிஸ்ரா: உபி மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா சமாஜ்வாதி கட்சியின் உட்கர்ஷ் சர்மாவை விட 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

*எல். முருகன்: ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராஜாவிடம் தோல்வி அடைந்தார்.

*அர்ஜுன் முண்டா: ஜார்க்கண்டின் குந்தி மக்களவைத் தொகுதியில், பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவை விட 1.49 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

*கைலாஷ் சவுத்ரி: விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ராஜஸ்தானின் பார்மரில் காங்கிரஸ் வேட்பாளர் உம்மடா ராம்பெனிவாலிடம் 4.17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

*ராவ் சாகேப் தன்வே: மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா தொகுதியில் களம் இறங்கிய ஒன்றிய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலேவிடம் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

*சுபாஷ் சர்க்கார்: மேற்குவங்க மாநிலம் பங்குரா தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை இணையமைச்சர் சுபார் சர்க்கார் 32 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திரிணாமுல் வேட்பாளர் அரூப் சக்ரவர்த்தியிடம் தோல்வியடைந்தார்.

*நிதிஷ் பிரமணிக்: ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நிதித் பிரமணிக் மேற்குவங்க மாநிலம் கூச்பெகர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் ஜெகதீஷ்சந்திராவிடம் 39 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

*சஞ்சீவ்பல்யாண்: ஒன்றிய கால்நடைத்துறை இணையமைசர் சஞ்சீவ்பல்யாண் முசாபர்நகர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக்கிடம் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேலும் மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற ஒன்றிய அமைச்சர்கள் பின்வருமாறு..

*சந்தோலி தொகுதியில் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே,

*ஜலான் தொகுதியில் ஒன்றிய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா,

*மோகன்லால்கஞ்ச் தொகுதியில் ஒன்றிய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் கவுசால் கிஷோர்,

*பதேப்பூர் தொகுதியில் ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி.

The post ஸ்மிருதி இரானி முதல் அஜய் மிஸ்ரா வரை .. மக்களவை தேர்தலில் மண்ணை கவ்விய 13 ஒன்றிய அமைச்சர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Smriti Irani ,Ajay Mishra ,EU ,Lok Sabha elections ,Delhi ,UNION ,MINISTER ,SMIRUTI IRANI ,Rajiv Chandrashekar ,Arjun Munda ,Kailash Choudhry ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...