×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 13 செ.மீ. மழை பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சிறுகமணி (திருச்சி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), பாரூர்(கிருஷ்ணகிரி), கொளப்பாக்கம் (காஞ்சி) தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெனுகொண்டாபுரம், போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), ரெட்ஹில்ஸ் பொன்னேரி (திருவள்ளூர்) தலா 6 செ.மீ. மழையும், ஜம்புகுட்டம்பட்டி(கிருஷ்ணகிரி), ஆலாங்காயம் (திருப்பத்தூர்), முகலிவாக்கம்(சென்னை) தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 13 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nedungalli, Krishnagiri District ,Chennai ,Nedungalli ,Krishnagiri district ,Chennai Meteorological Centre ,Bhiur, Krishnagiri District ,Sirugamani ,Trichy ,Nadrampalli ,Tirupathur ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...