×

ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்..!!

டெல்லி: கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் ஒரே விமானத்தில் டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரே விமானத்தில் பயணம் செய்கின்றனர். டெல்லி பயணத்திற்கு முன்பாக தங்கள் கட்சிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர். எதிரெதிர் கட்சிகளை சேர்ந்த இரு தலைவர்கள் முக்கியமான நேரத்தில் ஒரே விமானத்தில் வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The post ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்..!! appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Tejashwi Yadav ,Delhi ,Bihar ,Chief Minister ,Rashtriya Janata Dal ,
× RELATED நிதிஷ்குமாரை தொடர்ந்து அமித்ஷாவுடன்...