×

தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 

கோபி, ஜூன் 5: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றதை தொடர்ந்து நம்பியூர் அருகே உள்ள வேமாண்டாம்பாளையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திமுகவினர் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள நம்பியூர் வேமாண்டாம்பாளையத்தில் நம்பியூர் ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பணன், ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சென்னியப்பன், வேமாண்டாம்பாளையம் சக்திவேல், துரை பழனிச்சாமி, மூர்த்தி, சக்திவேலன், ஜெகதீஸ், செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

The post தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Gobi ,Subbarayan ,Tirupur ,Vemantambalayam ,Nambiur ,DMK Alliance ,
× RELATED கோபி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு