×

முத்துப்பேட்டை அருகே மதுபானம் பதுக்கிய இருவர் கைது

 

முத்துப்பேட்டை, ஜூன் 5: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை பகுதியில் சிலர் டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜாவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி ராஜா, குற்றபிரிவு காவலர்கள் திருமுருகன், மோகன், காவலர் ரபீக் உள்ளிட்ட போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அரசு டாஸ்மாக் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பதுக்கி வைத்திருந்த ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த அம்பிகாபதி மகன் முரளி (49) சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் முருகானந்தம்(49) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 323 மதுபானங்களை பறிமுதல் செய்து இருவரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post முத்துப்பேட்டை அருகே மதுபானம் பதுக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,DSP Raja ,Zambuwanoda ,Crime Squad Guards ,Thirumurugan ,Mohan ,Gawalar ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...