×

பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 5: திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்) நேற்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பிறவி மருந்தீஸ்வரர், நந்தீஸ்வரருக்கும் 11 விதமான சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பிரதோஷ நாயனார் நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைத்து விதமான செயல்களும் குறை இல்லாமல் நடைபெறுவதற்கும், ஊர் மேன்மைக்காகவும் பக்தர்கள் மேன்மைக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சர்வாலய உழவார பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Periyanayake Udanurai Biravi Darshaneeswarar temple ,Thiruthaurapoondi ,Thiruthurapoondi ,Periyanayaki ,Udanurai Piravi Darshaeeswarar Koil ,Big Temple ,Teipirai Pradosha ,Nandeeswarar ,Pradosha ,Nayanar Nandeeswarar ,Periyanayake Udanurai Born Pradosha Festival ,Dardoeswarar Temple ,
× RELATED வடபாதி கிராமத்தில் நிலத்தை வளமாக மாற்ற பசுமாட்டு கிடை அமைப்பு