×

40 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 

புதுக்கோட்டை, ஜூன் 5: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழ்நாடு- புதுச்சேரியில் 40 இடங்களையும் திமுக கூட்டணி வென்றதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 40 மக்களவைத் தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின.

இதையடுத்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று கூடிய திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். திமுக மாவட்ட அவைத் தலைவர் ரத்தினம், வட்ட செயலாளர் சத்தியா, நகர இளைஞரணி செயலாளர் கணேஷ், நிர்வாகிகள் அப்புக்காளை உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இதேபோல, மாவட்ட திமுக அலுவலகம் உள்ள பகுதியில் திமுகவினர் வெடிவெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேட்டுப்பட்டி பகுதியிலும் திமுகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

The post 40 தொகுதிகளில் தேர்தல் வெற்றியை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Pudukottai ,India Alliance ,Puducherry, Tamil Nadu ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED கருத்துக்கணிப்பை தவிடு பொடியாக்கி...