×

புதுக்கோட்டையில் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 சிறுமிகள் மீட்பு

 

புதுக்கோட்டை, ஜூன் 5: புதுக்கோட்டையிலுள்ள குழந்தைகள் இல்லத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்ற 3 சிறுமிகளில், 2 சிறுமிகள் மீட்கப்பட்டு, இல்லத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை நரிமேடு பகுதியிலுள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் இருந்து, குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக திருக்கோகர்ரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள சிறுமிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அங்கு சென்ற போலீஸார் நேற்று முன்தினம் இரவு மீட்டு வந்தனர். புதுக்கோட்டை சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு சிறுமியை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 சிறுமிகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Annai Satya Government Children's Home ,Pudukottai Narimedu ,
× RELATED ஆலங்குடி அருகே குடிநீர் வழங்க கோரி...