×

நாகப்பட்டினத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு

 

நாகப்பட்டினம், ஜூன் 5: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறால் இரண்டு மின்னணு இயந்திரம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் உள்ள நாகூர், திருப்புகலூர் வாக்குப் பதிவு மையத்தில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட்டபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென இயந்திரம் பழுது அடைந்தது. இதனால் அந்த இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. விவிபேட் இயந்திரத்தில் பவதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

The post நாகப்பட்டினத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagor ,Nagapatnam ,Assembly Constituency ,Parliamentary ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை