×

ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

பூந்தமல்லி, ஜூன் 5: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம், மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளங்கோவன் (38). இவருக்கு, கோமலா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற இளங்கோவன், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை மண்ணூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்புதூர் போலீசார், பெரும்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், ஏரில் மூழ்கி இறந்தது இளங்கோவன் என்பது தெரியவந்தது. மதுபோதையில் இருந்ததால் இளங்கோவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

The post ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Laborer ,Poontamalli ,Ilangovan ,Mannoor ,Kanchipuram district ,Gomala ,Elangovan ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...