×

காதல் மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

புழல், ஜூன் 23: செங்குன்றம் அருகே காதல் மனைவி குடும்பம் நடத்த வராததால் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவயானி, நடராஜன். இவர்களது மகன் கவுதம்(24). கோவளத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 13ம் தேதி கனிமொழியை சென்னை பெரியமேட்டில் உள்ள பத்திப்பதிவு அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்து கொண்டு அவரவர் வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் காதல் மனைவி கனிமொழியை தனது வீட்டுக்கு வருமாறு கவுதம் பலமுறை அழைத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த கனிமொழி காதல் கணவன் கவுதமின் வீட்டிற்கு செல்ல மறுத்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவுதம் நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியால் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் தேவியாணி மற்றும் உறவினர்கள் கவுதமை மீட்டு பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுதம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post காதல் மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Senggunram ,Devayani ,Natarajan ,Bhavani Nagar ,Padiyanallur panchayat ,Sengunram ,
× RELATED வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது போல...