×

பார் ஊழியரை மிரட்டி வழிப்பறி

தூத்துக்குடி, ஜூன் 5: தூத்துக்குடியில் பார் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(55). இவர், தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு வேலை முடிந்து மடத்தூர் பகுதியில் உள்ள அவரது தங்கும் இடத்திற்கு செல்வதற்காக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆறுமுகத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் இசக்கிமுத்து(20), கேவிகே நகரை சேர்ந்த பெருமாள் மகன் ஆகாஷ்(19), கருப்பசாமி மகன் சுதாகர்(22) ஆகியோர் ஆறுமுகத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிந்து, இசக்கிமுத்து, ஆகாஷ், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பார் ஊழியரை மிரட்டி வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Bar ,Thoothukudi ,Arumugam ,Nanguneri ,Nellai district ,Tasmac Bar ,Madathur ,Dinakaran ,
× RELATED துறையூர் நீதிமன்றத்தில் மருத்துவ முகாம்