×

இசை கலைஞர்கள் சங்க திறப்பு விழா

அரூர், ஜூன் 5: அரூர் அருகே ஈட்டியம்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்கள் நலச்சங்கத்தை, மாநில தலைவர் கானை சத்யராஜ் பெயர் பலகை மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க மாநில தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தார். நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ₹3ஆயிரம் வழங்கவேண்டும். அடையாள அட்டைகளை விண்ணப்பித்த 3 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஏலகிரி உள்ளிட்ட சுமார் 15 மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post இசை கலைஞர்கள் சங்க திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Music Artists Association Inaugural Ceremony ,Aroor ,president ,Kanai Sathyaraj ,Tamil Nadu Kalaitai All Folk Artists Welfare Association ,Etiyambatti ,Shekhar ,Music Artists Association Inauguration Ceremony ,Dinakaran ,
× RELATED நாய்கள் துரத்தியதால் மசூதிக்குள் புகுந்த மான்