×

பீரோவில் இருந்த நகை, பணம் மாயம்

மதுரை, ஜூன் 5: மதுரை அருகே வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் மாயமானது குறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(28). இவர் தனது வீட்டில் பீரோவில் 5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களும், ரூ.5 ஆயிரம் ரொக்கமும் வைத்திருந்தார். தன் தேவைக்காக எடுக்க சென்றபோது அவை அனைத்தும் மாயமாகி இருந்தது. யாரோ திருடிச் சென்றிருந்தது தெரிந்தது. இது குறித்து அவர் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து நகை, வெள்ளிப்பொருட்கள், ரொக்கத்தை திருடியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பீரோவில் இருந்த நகை, பணம் மாயம் appeared first on Dinakaran.

Tags : MADURAI ,Silambarasan ,Chinna Udaitha ,Dinakaran ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்