×

சமயநல்லூர் அருகே வாலிபர் வெட்டி கொலை

வாடிப்பட்டி, ஜூன் 5: சமயநல்லூர் அருகே அம்பலத்தடி காந்திநகர் காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் அரவிந்த்(24). இவர் அம்பலத்தடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வயல் வெளியில் நேற்று முகம் சிதைக்கப்பட்டு கழுத்தில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீசார் அரவிந்தன் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யார் கொலை செய்தது, எதற்காக கொலை நடந்தது என்ற விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post சமயநல்லூர் அருகே வாலிபர் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Samayanallur ,Vadipatti ,Easwaran ,Arvind ,Ambalathadi Gandhinagar Colony ,Ambalathadi ,
× RELATED தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி...