×

ஆயக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு

பழநி, ஜூன் 5: பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்க வேண்டிய சூழல் நிலவி அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது ஓரிரு நாட்களில் நடத்தை விதிமுறை திரும்ப பெறப்பட்டு விடும்.எனவே, குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆயக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Ayakudy municipality ,Palani ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு