×

காங்.போட்டியிடாத இந்தூரில் வரலாற்றில் இல்லாத வகையில் நோட்டா வாக்குகள்

போபால்: மத்திய பிரதேசம், இந்தூர் மக்களவை தொகுதியில்,பாஜ சார்பில் சங்கர்லால்வானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அக்சய் காந்தி பாம் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் திடீரென பாஜவில் சேர்ந்தார். இதனால் அந்த தொகுதியில் முக்கிய எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இந்தூர் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாஜ வேட்பாளர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2,18, 674 வாக்குகள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் சோலங்கி உட்பட 13 வேட்பாளர்கள் நோட்டாவுக்கு குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ளனர்.

The post காங்.போட்டியிடாத இந்தூரில் வரலாற்றில் இல்லாத வகையில் நோட்டா வாக்குகள் appeared first on Dinakaran.

Tags : Indore ,Bhopal ,Shankar Lalwani ,BJP ,Indore Lok Sabha ,Madhya Pradesh ,Congress ,Aksay Gandhi Bam ,Dinakaran ,
× RELATED முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஜவில் இணைந்தார்