×

சட்டீஸ்கரில் 10 தொகுதிகளில் பாஜ வெற்றி: முன்னாள் முதல்வர் பாகேலுக்கு பின்னடைவு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பாஜ வெற்றிபெற்றுள்ளது. ஒரு இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. ராய்ப்பூர் தொகுதியில் பாஜ மூத்த தலைவர் பிரிஜ்மோகன் அகர்வால், காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் உபாத்யாயாவை விட 4 லட்சத்து 83 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். ராஜ்நந்த்கான் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், பாஜ வேட்பாளர் சந்தோஷ் பாண்டேவை விட 45 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்கினார்.

The post சட்டீஸ்கரில் 10 தொகுதிகளில் பாஜ வெற்றி: முன்னாள் முதல்வர் பாகேலுக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chhattisgarh ,CM ,Bagel ,Raipur ,Congress ,Brijmohan Aggarwal ,Vikas Upadhyay ,chief minister ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...