×

அண்ணன் ஜெகனின் ஆட்சியை கவிழ்த்த தங்கை: சர்மிளாவும் தோல்வி

ஆந்திர மாநிலத்தில் கடந்த தேர்தலின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன்மோகன் முதல்வராக ஆட்சி நடத்தினார். ஜெகன்மோகன் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு முழு ஆதரவாக இருந்து வந்தார். இதனால் ஜெகன்மோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தெலங்கானாவில் இருந்த அவரது தங்கை ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். இது பல இடங்களில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைத்து வெற்றியை பறிக்க காரணமாக அமைந்தது. அதே சமயம் கடப்பா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சர்மிளா 1 லட்சத்து 35 ஆயிரத்து 737 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அண்ணனின் ஆட்சியை கவிழ்த்த சர்மிளாவும் தோல்வி அடைந்து ள்ளார்.

The post அண்ணன் ஜெகனின் ஆட்சியை கவிழ்த்த தங்கை: சர்மிளாவும் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Jagan ,Sharmila ,Andhra ,YSR Congress ,Jaganmohan ,Chief Minister ,Modi ,YS ,Telangana ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் படுதோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்