×

தோல்வியை தழுவிய பரூக் அப்துல்லா, மெகபூபா

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வரும் ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி ஆகியோர் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 5 தொகுதிகளிலும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட்டது.  ஸ்ரீநகர், அனந்தநாக் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி வென்றது.

ஆனந்தநாக்கில் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி தோல்வியை தழுவினார். ஜம்மு, உதம்பூரில் பாஜ வென்றது. ஜம்முவின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவரான உமர் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டார். இங்கு சுயேட்சை வேட்பாளரிடம் அவர் தனது செல்வாக்கை இழந்துள்ளார்.

The post தோல்வியை தழுவிய பரூக் அப்துல்லா, மெகபூபா appeared first on Dinakaran.

Tags : Farooq Abdullah ,Megabooba ,Vice President ,Jammu and Kashmir National Conference Party ,Omar Abdullah ,People Democratic Party ,Chief Minister ,Megabooba Mufti ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி...