×

அமேதியில் மண்ணை கவ்வினார் ஸ்மிருதி இரானி

உத்தரபிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் 5,39,228 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பதிவு செய்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஒன்றிய அமைச்சரும், பாஜ வேட்பாளருமான ஸ்மிருதி இரானி 3,72,032 வாக்குகள் பெற்று மண்ணை கவ்வினார். கடந்த 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தியை 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடித்திருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அமேதியில் மண்ணை கவ்வினார் ஸ்மிருதி இரானி appeared first on Dinakaran.

Tags : Smriti Irani ,Amethi ,Kishori Lal Sharma ,Congress ,Gandhi ,Uttar Pradesh ,Union Minister ,BJP ,
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி