×

பரபரப்பான இமாச்சல் இடைத்தேர்தல் முடிவு

இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்த மாநிலங்களவை எம்பி தேர்தலில் பாஜ வேட்பாளருக்கு கட்சி மாறி ஓட்டு போட்டதற்காக காங்கிரசின் 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேரையும் இடைத்தேர்தலில் பாஜ தனது கட்சி சார்பில் களமிறக்கியது. இந்த 6 தொகுதிகளையும் கைப்பற்றும் பட்சத்தில் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜ இருந்தது. இதனால் இமாச்சலில் மக்களவை தேர்தலுடன் நடந்த 6 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

அதில் காங்கிரஸ் 4 தொகுதிகளை கைப்பற்றி பாஜவின் முயற்சியை தவிடுபொடியாக்கி உள்ளது. 2 தொகுதிகளை பாஜ கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் 65 எம்எல்ஏக்கள் உள்ள சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 38 ஆக அதிகரித்துள்ளது. பாஜ 27 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. இன்னும் 3 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடைத்தேர்தல் மூலம் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் முழு மெஜாரிட்டியை பெற்றுள்ளது.

The post பரபரப்பான இமாச்சல் இடைத்தேர்தல் முடிவு appeared first on Dinakaran.

Tags : Himachal ,Congress ,BJP ,Rajya Sabha MP ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED இமாச்சல் முதல்வரின் மனைவி வெற்றி