×

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

வடமதுரை, ஜூன் 5: வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட ரெட்டியபட்டி அருகே உள்ள லக்கன் தெருவில் வசிப்பவர் மூர்த்தி (37). இவர் மகன் இளவரசன் (9) அரசுபள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான.இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் உள்ள மின்விசிறியை போடுவதற்கு சுவிட்ச் போர்டில் கை வைத்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்தார். அங்கு வந்த மூர்த்தி சிறுனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் தாக்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : VADAMADURAI ,LAKAN STREET ,RETIYPATI ,VADAMADURAI BARURACHI ,Prince ,School ,Dinakaran ,
× RELATED வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்