×

ஆளுமைத்திறன் பயிற்சி

பழநி, ஜூன் 5: பழநியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி நடந்தது. பயிற்சியில் அவார்டு அறக்கட்டளை பகல் நேர காப்பக மாணவர்கள், நகர்ப்புற பள்ளிகளில் உள்ள 6,7,8ம் வகுப்புகளில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகள் 50 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் பெற்றோரும் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஆளுமைத்திறன் தொடர்பான பயிற்சிகளும், கைவேலை, வீட்டு சாதன அழகு கலைப்பொருட்கள், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது. சிறந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆளுமைத்திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Palani ,Award Foundation ,Dinakaran ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு