×

7வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி: தேர்தல் மன்னன் பட்டியலில் இணைகிறார்

தென்காசி: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி 1998ல் முதன்முறையாக தென்காசி தொகுதியில் தனித்து போட்டியிட்டு அதிமுகவிடம் தோற்றார். இரண்டாவது முறையாக 1999ல் டாக்டர் கிருஷ்ணசாமி தமாகாவுடன் கூட்டணி சேர்ந்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றார். 2004 மற்றும் 2009ல் மூன்று மற்றும் நான்காவது முறையாக டாக்டர் கிருஷ்ணசாமி தனித்து போட்டியிட்டார். இதில் 2004ல் 1 லட்சத்து 1,122 வாக்குகளும், 2009ல் 1 லட்சத்து 16,685 வாக்குகளும் பெற்றார். 5வது முறையாக 2014ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 2 லட்சத்து 62,812 வாக்குகளை பெற்று தோற்றார். 6வது முறையாக 2019ல் அதிமுக மற்றும் பாஜ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 3 லட்சத்து 55 ஆயிரத்து 389 வாக்குகளை பெற்றார். 7வது முறையாக தற்போதைய தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் மன்னன் பத்மராஜன் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியடைவதுதான் அவரது வேலை. அதுபோலவே கிருஷ்ணசாமியும் போட்டியிட்ட நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியை மட்டுமே பெற்று உள்ளார்.

The post 7வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி: தேர்தல் மன்னன் பட்டியலில் இணைகிறார் appeared first on Dinakaran.

Tags : Krishnasamy ,Tenkasi ,Dr. ,New Tamilnadu Party ,AIADMK ,Tamaka ,
× RELATED குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது