×

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒற்றை இலக்க ஓட்டுக்கு பாஜ, அதிமுக போட்டி

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3வது சுற்றில் ஒரு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 895 வாக்குகள் திமுகவுக்கும், 18 வாக்குகள் அதிமுகவுக்கும், ஒரேயொரு ஓட்டு பாஜவுக்கும் பதிவானது. 5வது சுற்றில் சில பூத்களுக்கான இயந்திரத்தில் பாஜவுக்கு 2 முதல் 5 வாக்குகளே பதிவாகியிருந்தன. அதிமுக இரட்டை இலக்க எண்களில் வாக்குகளை பெற்றிருந்தது. 6வது சுற்றில் திமுக 8,968 வாக்குகள் பெற்றிருந்தது. இதில் ஒரு பூத் இயந்திரத்தில் பதிவான ஓட்டில் பாஜவும் அதிமுகவும் தலா ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தன.

6வது சுற்றில் அதிமுக 230 வாக்குகளும், பாஜ 644 வாக்குகளும் பெற்றிருந்தன. 7வது சுற்றில் 7 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் பாஜ ஒவ்வொன்றிலும் 4, 2, 8, 3, 4, 8,2 என ஒற்றை இலக்க வாக்குகளும், 4 இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் அதிமுக ஒவ்வொன்றிலும் 8, 5, 3, 9 என ஒற்றை இலக்கத்திலும் வாக்குகள் பெற்றிருந்தன. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் பசுபதி 1,17,682 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இவர் உட்பட 29 வேட்பாளர்களும் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

* தூத்துக்குடியில் அதிமுக, பாஜ பெற்ற ஒரு ஓட்டு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள், நேற்று அரசு இன்ஜினியரிங் கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டன. இதில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜார்ஜ் ரோட்டில் உள்ள காரப்பேட்டை பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் பாகம் எண் 161ல் மொத்தம் 432 வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஒரு வாக்கும், பாஜ கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனுக்கு ஒரு வாக்கும் பதிவாகி இருந்தது. மீதியிருந்த 430 வாக்குகளும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு கிடைத்தது.

* ஆம்பூர் பூத்தில் ஜீரோ
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 143வது பூத்தில் பாஜ ஜீரோ வாக்கும், அதிமுக 14 வாக்குகளும், திமுக 810 வாக்குகளும் பெற்றது. 149வது பூத்தில் பாஜ பூஜ்ஜியம், அதிமுக 12, திமுக 42 வாக்குகளும் பெற்றது. 120வது பூத்தில் பாஜ ஒரே ஒரு வாக்கும், அதிமுக 10 வாக்குகளும், திமுக 988 வாக்குகளும் பெற்றது.

The post வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒற்றை இலக்க ஓட்டுக்கு பாஜ, அதிமுக போட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Vellore ,DMK ,Vaniyambadi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்