×

தென்சென்னை தொகுதியில் 2.24 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி

சென்னை: தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் 2 லடசத்து 24,955 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றுள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியாகனது விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது இந்த தொகுதியை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கட்சிகள் அதிகம் முறை வென்றுள்ளன. திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக தரப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாஜக தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக தரப்பில் ஜெயவர்தன் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் தமிழ்ச் செல்வி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக இரண்டு அரங்குகளில் 9 மேஜைகள் போடப்பட்டிருந்தது.

அப்போது செல்லாத ஓட்டுகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால், கட்சி பிரதிநிகளுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஓட்டுகளை பிரித்து வைக்கும் பணி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியும், காலை 9.22 மணி வரை தபால் ஓட்டுகள் எண்ணப்படவில்லை. தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டதால், அடுத்த கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

மொத்தம் பதிவான 10,96,026 வாக்குகளில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 5,13,974 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் 2,89,019 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் 1,71,274 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 83,391 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தனர். நோட்டாவுக்கு 15,585 வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசையை விட 2,24,955 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தமிழச்சி தங்கப்பாண்டியனே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தென்சென்னை தொகுதியில் 2.24 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Tamilachi Thangapandian ,South Chennai constituency ,Chennai ,DMK ,Tamilchi Thangapandian ,South Chennai Parliamentary Constituency ,Virugambakkam ,Saidappettai ,Thiagaraya Nagar ,Mylapore ,Velachery ,Choshinganallur ,Tamilachi ,Thangapandian ,Dinakaran ,
× RELATED ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக...