×

வெற்றியும் 4 லட்சம்… தோல்வியும் 4 லட்சம்…பாரிவேந்தரின் பரிதாபம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு 6,03,209 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2,14,102 வாக்குகளும், பாஜ வேட்பாளர் பாரிவேந்தர் 1,61,866, நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 1,12,200 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுமார் 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில் பாரிவேந்தர் போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவபதி களம் இறங்கினார். இதில் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post வெற்றியும் 4 லட்சம்… தோல்வியும் 4 லட்சம்…பாரிவேந்தரின் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Barivendar ,PERAMBALUR ,DIMUKA ,ARUN NERU ,ADAMUKA ,CHANDRAMOGAN ,BAJA ,BARIVENDER ,THENMOZHI ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...