×

டெபாசிட் இழந்த பாஜ துணை தலைவர்கள்

நாமக்கல்: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட பலரும் தயங்கிய நிலையில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவர், நான் போட்டியிட சீட் கேட்கவில்லை. தலைமை என்னை அறிவித்துள்ளதால் போட்டியிடுகிறேன் எனக்கூறி பாஜ மற்றும் கூட்டணி கட்சியினரை அதிர வைத்தார்.

அவர் முறையாக பிரசாரத்திற்கு வரவில்லை எனவும், பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டணி கட்சியினரை அழைத்து பேசவில்லை என பாஜவினரும், கூட்டணி கட்சியினரும் குறை கூறி வந்தனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது, நாம் தமிழர் கட்சிக்கும், பாஜகவிற்கு தான் போட்டி என்பது போல் முன்னணி நிலவரம் வந்ததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். கடைசியில் நாமக்கல் தொகுதியில், பாஜ வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் டெபாசிட் இழந்தார்.

அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் டெபாசிட்டை பறிகொடுத்தார். கருப்பு முருகானந்தம்: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முரசொலி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜ துணை தலைவர் கருப்பு முருகானந்தம் சுமார் ஒரு லட்சத்துக்கு 69 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹீமாயூன் கபீர் சுமார் ஒரு லட்சத்துக்கு 19 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

The post டெபாசிட் இழந்த பாஜ துணை தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Namakkal ,vice-president ,KP Ramalingam ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முன்னாள் குடியரசு...