×

அதிமுக, பாஜவை பின்னுக்கு தள்ளி 4 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் புதுவை மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜ தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனால் திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவியது. இதில், சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டது. திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதல் கட்சியாக வந்துள்ளது. அடுத்தடுத்த இடங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதாவது, இரண்டாவது இடத்தைப் பெறும் கட்சி, பாஜவா, அதிமுகவா என்ற போட்டி நிலவியது. இந்தச் சூழ்நிலையில், 4 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3 இடத்திற்கு வந்துள்ளனர். அதன்படி ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப் பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிமுக, பாஜவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக, பாஜவை பின்னுக்கு தள்ளி 4 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,AIADMK ,BJP ,Chennai ,Puduvai ,Tamil Nadu ,DMK ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...