×

மாநிலத்தில் அதிக வாக்குகள் (5,72,155) வித்தியாசம் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சாதனை வெற்றி: பாஜ, அதிமுக உள்பட அனைவரின் டெபாசிட்டும் காலி

சென்னை: தமிழ்நாட்டின் முதல் நாடாளுமன்ற தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் 20,85,991 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,30,738 பேர் வாக்களித்தனர். காங்கிரஸ், தேமுதிக, பாஜ, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் என அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 14 பேர் களத்தில் இருந்தனர். இதில் 7 பேர் சுயேச்சைகள். மொத்தம் 36 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் முதல் சுற்றில் இருந்தே திமுக கூட்டணி வேட்பாளரான சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) முன்னிலையை தொடர்ந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவரது வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.

அதே நேரத்தில் 2வது இடத்தை தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியும், பாஜ வேட்பாளர் பால கணபதியும் மாறிமாறி பிடித்தனர். கூடவே 5வது சுற்றின் முடிவில் சசிகாந்த் செந்திலுக்கும் மற்ற வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம் லட்சம் வாக்குகளை கடந்தது. ஒரு கட்டத்தில் எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் சசிகாந்த் செந்தில் இருந்தார். இடையில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளிலும் சசிகாந்த் செந்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற, மற்ற வேட்பாளர்கள் 800க்கும் குறைவான தபால் வாக்குகளையே பெற்றனர்.

கடைசியாக 34வது சுற்றின் முடிவில் 7,96,956 வாக்குகளை பெற்ற சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.ப் பெற்றவர் என்ற சாதனயையும் படைத்தார். பாஜ வேட்பாளர் பாலகணபதி 2வது இடத்தையும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 3வது இடத்தையும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் பிடித்தனர். பதிவான வாக்குகளில் குறைந்தது 6ல் ஒரு பங்கான 2,38,457 வாக்குகள் பெற்றால் மட்டுமே இந்த தொகுதியில் டெபாசிட் திரும்ப பெற முடியும். ஆனால் சசிகாந்த் செந்திலை தவிர யாரும் இந்த வாக்குகளை பெறாததால் அவரை தவிர பாஜ, தேமுதிக உள்பட போட்டியிட்ட 13 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

The post மாநிலத்தில் அதிக வாக்குகள் (5,72,155) வித்தியாசம் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சாதனை வெற்றி: பாஜ, அதிமுக உள்பட அனைவரின் டெபாசிட்டும் காலி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Congress ,Sasikanth Senthil ,Bajah ,Adimuka ,Chennai ,Tamil Nadu ,Thiruvallur ,Congress ,Demudika ,Bajaj ,Nam Tamil ,Samaj ,Baja ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...