×

பேரரசர் நிர்வாணமாகி விட்டார்: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு

சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகள் பற்றி குறிப்பிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், பேரரசர் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார் என மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜவை எதிர்த்து போட்டியிட்டவர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து அவர் பாஜவுக்கு எதிராக தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதும் அவர் டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பேரரசர் நிர்வாணமாக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேறொருவர் தயவில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்தியாவுக்கும் (இந்தியா கூட்டணி) பொறுப்புள்ள குடிமை சமூகத்துக்கும் நன்றி. அவரது (மோடி) ஈகோவை துளைத்து, அவரது இடத்தை அவருக்கு காட்டியதற்கு நன்றி. நமது நாட்டுக்காக ஒருங்கிணைந்து போராடினோம். அது தொடரும். ஜெய் ஹிந்த்.

The post பேரரசர் நிர்வாணமாகி விட்டார்: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Chennai ,Prakash Raj ,Lok Sabha elections ,Modi ,BJP ,Karnataka ,Baja ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...