×

அமமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி: டிடிவி தினகரன்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த தேனி மற்றும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் வீட்டுப் பிள்ளையாக, நண்பனாக, சகோதரனாக என்னை நேசிக்கும் தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் அனைவர் மீதும் கொண்டிருக்கும் அன்பு சாம்ராஜ்யம் என்றென்றும் தொடரும்.

பணம், பரிசுப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகளை கடந்து அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்ண மறந்து, உறக்கம் தொலைத்து தன்னலம் கருதாமல் கழகத்திற்காக ஒவ்வொரு நொடியும் உழைத்த என் உயிரினும் மேலான தொண்டர்களுக்கும் அனைத்து நிலையிலான நிர்வாகிகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தற்காலிக தடைகளையும் தாண்டி நம் பயணம், நாம் கொண்டிருக்கும் லட்சியத்தை அடையும் வரை உறுதியாக தொடரும்” என தெரிவித்துள்ளார்.

The post அமமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Amukh ,DTV Dinakaran ,Chennai ,Amma People's Progress Association ,DTV ,Dinakaran ,Teni ,Trichy Parliaments ,Mamma People's Development Association ,Ammukh ,
× RELATED அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியை...