×

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி உறுதி

கன்னியாகுமரி: விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானது. 33,008 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். எண்ணப்பட வேண்டிய வாக்குகளைவிட வாக்கு வித்தியாசம் அதிகமாக உள்ளதால் தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானது. தாரகை கத்பர்ட் வெற்றி உறுதியானதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்கிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி பாஜக கூட்டணி 285 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 227 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை வகித்து வருகிறார். இத்தொகுதியில் நந்தினி (பாஜக), ராணி (அதிமுக) மற்றும் ஜெமினி (நாதக) ஆகியோரும் வேட்பாளர்களாக உள்ளனர்.

The post விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி உறுதி appeared first on Dinakaran.

Tags : Varangoda Assembly Constituency Congress ,Taragai Kathbert ,Kanyakumari ,Congress ,Dharagai Kathbert ,Vlawangodu Assembly Constituency ,Wlawangadu Assembly Constituency Congress ,Dargai Ghatbert ,
× RELATED குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்...