×

தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி: சேலம் நெடுஞ்சாலை நகர் வெறிச்சோடியது

சேலம்: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டும், வீட்டில் இருந்து கொண்டும் தேர்தல் முடிவுகளை தெரிந்து வருகின்றனர்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் உள்ளார். காலை சுவாமி கும்பிட்ட அவர் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தேர்தல் முடிவுகளை பார்த்து வருகிறார்.

தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னிலையில் உள்ள இடங்களில் மட்டும் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் தேர்தல் முடிவுகளை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெறிச்சோடி காணப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. அவரது வீட்டுக்கு முன்பு 4 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவரை பார்க்க வந்த அதிமுகவினர் கூட, அவர்கள் வந்த வாகனத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

The post தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி: சேலம் நெடுஞ்சாலை நகர் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Salem highway ,Salem ,General Secretary ,
× RELATED துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!