×

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் பேச்சுவார்த்தை

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் இதுவரை தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 238 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆதரவை திரட்ட முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 100 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்குதேசம் மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரை இழுக்கவும் இந்தியா கூட்டணி முயற்சி செய்து வருகிறது.

இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று சந்திரபாபுவுக்கு டி.கே.சிவகுமார் உறுதி அளித்துள்ளார். தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என கூறப்படுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக் உடனும் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடிடையே இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

The post பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,All India ,Sharad Pawar ,Patna ,BJP ,India Alliance ,Dinakaran ,
× RELATED டெல்லி பயணம் ஒரே விமானத்தில் நிதிஷ், தேஜஸ்வி