×

பாஜகவை பின்னுக்கு தள்ளி 3 இடத்துக்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தன. பாஜக ஏற்கனவே ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற நிலையில் 542 இடங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தர்மபுரி தொகுதியில் பாமகவின் சௌமியா அன்புமணியும், விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் விஜய பிரபாகரனும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

முதல் இடங்களுக்கு பிரதான கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் அதிக தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி, மற்றும் புதுச்சேரி ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். முன்னதாக பாஜகவை விட நாம் தமிழர் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கி காட்டட்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்த நிலையில், தற்போது 40 தொகுதிகளில் 8 இடங்களில் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

 

The post பாஜகவை பின்னுக்கு தள்ளி 3 இடத்துக்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,BJP ,Chennai ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...