×

மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

*தேடும் பணி தீவிரம்

மரக்காணம் : மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (53). மீனவரான இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் சதீஷ் (28) என்பவருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. கடற்கரையில் இருந்து சற்று தொலைவு சென்றபோது, பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்துவிட்டது.

இதனால் கடலில் மூழ்கி தத்தளித்த தந்தையும், மகனும் உயிருக்கு போராடியுள்ளனர். இதில் சதீஷ் மட்டும் நீந்தி கரை திரும்பிவிட்டார். ஆனால், கடலில் மூழ்கிய குமார் என்ன ஆனார் என தெரியவில்லை. அவரை சக மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மீனவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Marakkanam ,Kumar ,Ekirigupam village ,Viluppuram district ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்