×

ராமநாதபுரம் தொகுதியில் ஒ.பி.எஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் ஒ.பி.எஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் களம் காணும் நிலையில், அதே பேரில் 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவரின் வேட்புமனு தவிர பன்னீர்செல்வம் என்ற பெயரில் மனுத்தாக்கல் செய்த மீதமுள்ள ஐந்து பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை வாக்களார்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணியில் சுயேட்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் – 44,079 வாக்குகள் பெற்றுள்ளார். பிற போட்டியாளர்களின் ஓச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 342, ஓச்சத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 64. ஓய்யாத் தேவர் மகன் பன்னீர்செல்வம்-161, ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் – 120, மலையாண்டி மகன் பன்னீர்செல்வம்- 234 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

The post ராமநாதபுரம் தொகுதியில் ஒ.பி.எஸ் பெயரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Chief Minister ,O. Panneerselvam ,Ramanathapuram Lok Sabha ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு