×

தேர்தல் முடிவுகள் 2024: கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை

கேரளா: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது அதன்படி, பாஜக கூட்டணி 289 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் – 17 இடங்களிலும், இடதுசாரி -1, இடத்திலும், பாஜக -2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

The post தேர்தல் முடிவுகள் 2024: கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை appeared first on Dinakaran.

Tags : 2024 ,Congress ,Rahul Gandhi ,Kerala ,Wayanad ,Lok Sabha ,2024 Lok Sabha elections ,Left Democratic Front ,Wayanad, Kerala ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களின்...