×

விருதுநகரில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை: 3வது இடத்தில் ராதிகா சரத்குமார்

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் கேப்டன் மகன் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்தியா அளவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிகவின் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.

The post விருதுநகரில் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை: 3வது இடத்தில் ராதிகா சரத்குமார் appeared first on Dinakaran.

Tags : Vijaya Prabhakaran ,Virudhunagar ,Radhika Sarathkumar ,Captain Magan Vijaya Prabhakaran ,Tamil Nadu ,Puducherry ,India Alliance ,Indian Lok Sabha election ,Vijay Prabhakaran ,
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதியில்...