×

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 40, பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை!

டெல்லி: உ.பி.யில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யானது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட்டது. இம்முறை, 400 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு தேர்தலை சந்தித்த பாஜ கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டுள்ளது. இதை முற்றிலும் நிராகரித்துள்ள இந்தியா கூட்டணி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குறைந்தபட்சம் 295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனால், பாஜ, இந்தியா கூட்டணிகள் இடையே யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உ.பி.யில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யானது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை; பாஜக கூட்டணி 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது

The post வாரணாசியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 40, பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை! appeared first on Dinakaran.

Tags : PM MODI ,UTTAR PRADESH ,BJP ,Delhi ,U. B. ,Yil ,18th Lok Sabha elections ,Varanasi ,Congress ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...