×

இந்திய ஜனநாயகத் திருவிழா: வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரம்!

சென்னை: வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்; அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிக்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 30,000 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அரசு ஊழியர்கள், முகவர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், நெக் பேண்ட் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய ஜனநாயகத் திருவிழா: வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Indian Democracy Festival ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்