×

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

ராஜபாளையம், ஜூன் 4: ராஜபாளையம் அருகே வீசிய பலத்த காற்றில் மரம் சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. இதில் அப்பகுதியில் உள்ள வடக்கு தெருவில் வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் சேதமடைந்தது.

மின் கம்பம் சேதமடைந்ததால், அப்பகுதியில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது.

The post ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Chhatrapatti ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் கூட்டு உள்ளூர் திட்டக்குழும ஆலோசனை கூட்டம்