×

காங்கயத்தில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

 

காங்கயம், ஜூன் 4: காங்கயத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நகர திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கயம் திமுக நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமையில் காங்கயம் – பஸ் நிலையம் அருகே கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் கட்சி மாநில, மாவட்ட நகர நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா: காங்கயத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பிறந்தநாள் விழா ஒன்றிய அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமையில் கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சி.கருணை பிரகாஷ் தலைமையில் கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

The post காங்கயத்தில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : DMK ,Gangayama ,Kangayam ,Chief Minister ,Karunanidhi ,City Secretary ,Vasantham Na.Semalaiyappan ,Dinakaran ,
× RELATED காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்