×

திருப்பூரில் 196.10 மிமீ மழைப்பொழிவு

 

திருப்பூர், ஜூன் 4: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக ஏராளமான குளம் குட்டைகள் நிரம்பின. அதனைத் தொடர்ந்து கடத்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், செங்கப்பள்ளி, அவிநாசி பாளையம், திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மாலை நேற்று அதிகாலை வரை சாரல் மழையாக தொடர்ந்தது. நேற்று காலை 6 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழைப்பொழிவின் அளவு பின்வருமாறு: திருப்பூர் தெற்கு பகுதியில் 17 மில்லி மீட்டர், ஊத்துக்குளியில் 28 மில்லி மீட்டரும் மூலனூரில் 9 மில்லி மீட்டர், அமராவதி அணைப்பகுதியில் 16 மில்லி மீட்டர் மடத்துக்குளத்தில் 3 மில்லிமீட்டர் வெள்ளகோவிலில் 8 மில்லி மீட்டர் அவிநாசியில் அதிகபட்சமாக 61 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 196.10 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்தது. தொடர்ந்து நேற்றைய தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. வெயில் குறைந்த மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post திருப்பூரில் 196.10 மிமீ மழைப்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து